நெல்லை அபிஷேகபட்டி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் தமிழ்நாடு அரசின் ஸ்கில்ஸ் திட்டத்தின் கீழ் இணைந்து இன்று (ஜூன் 11) வேலைவாய்ப்பு முகாமை நடத்தியது. இதில் 31 மாணவர்கள் பங்கேற்று தங்கள் தொழில் விருப்பத்திற்கு ஏற்ப பல்வேறு வேலை வாய்ப்புகளை தேர்ந்தெடுத்தனர். மாணவர்களுக்கு பயிற்சியுடன் கூடிய வேலை வாய்ப்பு வழங்கப்படுகிறது. பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சந்திரசேகர் இந்நிகழ்வில் பங்கேற்றார்.