நெல்லை சந்திப்பு கருப்பந் துறை புனித வியாகப்பர் ஆலயத்தின் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக சப்பர பவனி நேற்று நடைபெற்றது. நெல்லை தொகுதி காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் ராபர்ட் ப்ரூஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இந்த சப்பர பவனியை தொடங்கி வைத்தார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.