பாளையங்கோட்டை சாந்தி நகரில் வசித்து வரும் நெல்லையின் பிரபல எழுத்தாளர் நாறும்பூநாதன் நேற்று காலமானார். அவரது மறைவு எழுத்தாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இந்த நிலையில் நெல்லை மத்திய மாவட்ட திமுக செயலாளரும் பாளையங்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அப்துல்வகாப் இன்று சாந்தி நகரில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று நாறும்பூநாதன் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.