ஆண்ட பரம்பரை என அமைச்சர் மூர்த்தி பேசியது சர்ச்சை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து பாளையங்கோட்டையில் சபாநாயகர் அப்பாவு இன்று (ஜனவரி 2) அளித்த பேட்டியில், எந்த சூழலில் அமைச்சர் பேசினார் என்று தெரியவில்லை. ஒவ்வொருவரும் தங்களோடு சமூகத்தை சேர்ந்தவர்கள் எங்கள் சமூகம் தான் நாட்டை ஆண்டது என கூறுவார்கள் அதை சொல்லக்கூடாது என கூற இயலாது. அதை ஒரு குற்றமாக கருதக்கூடாது என தெரிவித்தார்.