நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. நெல்லை மேலப்பாளையத்தில் பக்ரித் பண்டிகை முன்னிட்டு மேலப்பாளையம் பஜாரில் நேற்று நள்ளிரவு வரை மக்கள் கூட்டம் அலைமோதியது. இரவு ஒரு மணி வரை மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிச் சென்றனர். கடைகளும் விடிய விடிய இருந்தன. இதனால் மேலப்பாளையம் பஜார் மக்கள் தலைகீழாக காட்சி அளித்தது.