நெல்லை மாவட்டம் தெற்கு பாப்பான்குளம் அருகே மணிமுத்தாறு மலையடிவாரத்தில் ஹனிபா என்பவரது தோட்டத்தில் நேற்று இரவு காட்டு யானை இறங்கி உள்ளது. ஒற்றை யானை தோட்டத்தை சுற்றி வலம் வந்த நிலையில் அங்கிருந்த வாழை மரங்களை புடுங்கி நாசம் செய்துள்ளது. யானை வந்து சென்று கால் தடம் பதிந்துள்ளது. எனவே விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர். எனவே யானை நடமாட்டத்தை கட்டுப்படுத்த வனத்துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.