நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு நெல்லை மாவட்டத்தில் அம்பாசமுத்திரம் சுற்றுவட்டார பகுதியில் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக இடைகால் பள்ளக்கால் புதுக்குடி போன்ற பகுதியில் அதிகாலை வரை மிதமான மழை நீடித்தது. இதனால் அங்கு குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.