நெல்லை தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பது தொடர்பாக உயர் நீதிமன்ற நீதிபதிகள் புகழேந்தி சாமிநாதன் இருவரும் நெல்லை மீனாட்சிபுரம் தாமிரபரணி ஆற்றில் தற்போது அதிரடியாக ஆய்வு செய்து வருகின்றனர். மாநகராட்சி ஆணையர் உட்பட அனைத்து துறை அதிகாரிகளும் இந்த ஆய்வில் பங்கேற்றுள்ளனர். ஆற்றில் கழிவுநீர் கலப்பது தொடர்பாக நீதிபதிகள் நேரடியாக ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர்.