தமிழகத்தில் நெல்லை தென்காசி தூத்துக்குடி போன்ற தென் மாவட்டங்களில் சில தினங்களாக வெயில் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் தென் மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி நெல்லை மாநகரப் பகுதியில் இன்று பிற்பகல் திடீரென இடி மின்னலுடன் பலத்த மழை பெய்ய தொடங்கியது. குறிப்பாக வண்ணாரப்பேட்டை பாளையங்கோட்டை போன்ற பகுதியில் பலத்த மழை பெய்தது.