நெல்லையில் இன்று பிற்பகலில் வெயிலின் தாக்கம் முழுமையாக குறைந்து வானிலை மாற்றம் ஏற்பட்டு கருமேகம் சூழ்ந்தது பின்னர் இடி மின்னலுடன் பரவலாக மழை பெய்ய தொடங்கியது. நெல்லை மாநகரில் நெல்லை டவுன், நெல்லை சந்திப்பு, பாளையங்கோட்டை, வண்ணார்பேட்டை, கேடிசி நகர், என் ஜி ஓ காலனி, பெருமாள்புரம் கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.