நெல்லை கூத்தங்குழி பாத்திமா நகரை சேர்ந்த அஜித் என்பவரை முன்விரோதம் காரணமாக கொலை செய்த வழக்கில் கைதான ரோஜன், ரகுமான், ஆஞ்சிலோ, பார்த்திபன் ஆகியோர் பொதுமக்களை அச்சுறுத்தி வருவதால் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய எஸ்பிக்கு போலீசார் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து எஸ்.பி. பரிந்துரையில் மாவட்ட ஆட்சியர் உத்தரவில் மேற்கண்ட 4 பேரும் குண்டர் சட்டத்தில் சிறையில் நேற்று (அக்.,5) மாலை அடைக்கப்பட்டனர்.