நெல்லை சுத்தமல்லி அருகே நரசிங்கநல்லூரில் புதிய தொழிற்பேட்டை அமைக்க இன்று தமிழக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு வரவேற்பு தெரிவித்து சிறு குறு தொழில் சங்க தலைவர் அனந்த சேகர் அளித்த பேட்டியில், இந்த தொழிற்பேட்டை மூலம் சுமார் 4000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். இந்த பகுதி அதிக வளர்ச்சி பெறும் எனவே முதல்வருக்கு மக்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என கூறினார்.