நெல்லை மூலைக்கரைப்பட்டியில் இன்று அரசு பஸ்சில் லக்கேஜ் உடன் ஏற சென்ற பயணி ஒருவரை நடத்துனர் கன்னத்தில் அறைந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதையடுத்து போக்குவரத்து கழக அதிகாரிகள் நடத்திய விசாரணையில் பயணியை தாக்கிய நடத்துனர் பெயர் சேதுராமலிங்கம் என்பது தெரியவந்துள்ளது. எனவே சேதுராமலிங்கத்திடம் அதிகாரிகள் விளக்கம் கேட்டுள்ளனர்.