சபாநாயகர் அப்பாவு இன்று நெல்லையில் அளித்த பேட்டியில், இந்தியா என்பது ஒரு மதச்சார்பற்ற நாடு இங்கு ஜாதி மதம், பாலுணர்வு, பிறப்பு அடிப்படையில் எந்த வேறுபாடும் காட்டக்கூடாது என்பதையே நமது இந்திய அரசியலமைப்பு சட்டம் கூறுகிறது. ஆளுநர் கோட்சே பார்வையில் உள்ளார். இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராக பேசுவதை அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.