அதிமுக முன்னாள் நெல்லை நகர இளைஞரணி செயலாளர் சுதா கோபால் அவர்களின் 28 ஆம் ஆண்டு நினைவஞ்சலி முன்னிட்டு நெல்லையை அடுத்த மேல்நத்தம் கிராமத்தில் ஸ்ரீ சுதா பாலாஜி கிளினிக் சார்பில் மாபெரும் இலவச மருத்துவ முகாம் இன்று காலை நடைபெற்றது. முகாமை அதிமுக அமைப்பு செயலாளர் சுதா பரமசிவன் தொடங்கி வைத்தார் இதில் மருத்துவர்கள் பொதுமக்களுக்கு சர்க்கரை அளவு ரத்த அழுத்தம் உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொண்டனர்