டவுனை சேர்ந்த ஜாகிர் உசேன் பிஜிலி என்பவர் இன்று காட்சி மண்டபம் அருகில் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்நிலையில் கொலைக்கான காரணம் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி மாற்று மதத்தைச் சேர்ந்த ஒருவர் இஸ்லாமிய பெண்ணை திருமணம் முடித்த நிலையில் அவருக்கும் ஜாகீர் உசேனுக்கும் இடையே நிலப் பிரச்சினை இருந்ததாக கூறப்படுகிறது. எனவே இந்த முன் விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது.