நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மேலப்பாளையம் பகுதியை சேர்ந்த ஷேக் முகம்மது என்பவர் நீரில் மூழ்கி இறந்தமைக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ. 1 லட்சத்திற்கான காசோலையை அவரது மனைவி சித்திக் ஆயிஷா என்பவரிடம் மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் கா. ப. கார்த்திகேயன் வழங்கினார்.