திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலத்திற்குட்பட்ட 40, 43 வது வார்டு பகுதியில் கழிவுநீர் ஓடைகளை தூர் வாரும் பணி இன்று (அக்.,5) நடைபெற்றது. இந்த பணியினை மேலப்பாளையம் மண்டல தலைவர் கதீஜா இக்லாம் பாசிலா, மேலப்பாளையம் மண்டல உதவி ஆணையாளர் சந்திரமோகன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினர். தொடர்ந்து மழை காலத்திற்க்கு முன்பாக பணிகளை முடிக்க உத்தரவிட்டனர்.