மறைந்த முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு பிறந்தநாளை முன்னிட்டு நெல்லை மாநகர திமுக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக நெல்லை மாநகராட்சி துணை மேயர் ராஜூ ஏற்பாட்டில் தச்சநல்லூர் சிவன் கோவிலில் ஆதரவற்ற முதியோர்களுக்கு தச்சநல்லூர் பகுதி கழக நிர்வாகிகள் முன்னிலையில் மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.