நெல்லை அரசு சட்டக்கல்லுரியில் இன்று மாநில அளவிலான தமிழ் மாதிரி நீதிமன்ற போட்டி தொடங்கியது. இந்த போட்டியை நெல்லை சரக டிஐஜி மூர்த்தி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசும்போது, நீதிமன்றங்களில் நீதிபதிகளாக இருப்பவர்கள் வக்கீலை விட 200 மடங்கு மதிநுட்பம் கொண்டவர்களாகவே இருப்பார்கள். அவர்களிடம் சுருக்கமாக செய்தியை சொல்லி வாதிடும் திறமையை வக்கீல்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றார்.