நெல்லை பாளையங்கோட்டை மருத்துவக்கல்லூரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் ஒருவரது மகனுக்கும் அவரது மனைவிக்கும் இடையே உள்ள குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக மனைவியின் தந்தை, அவரது உறவினர்கள் சேர்ந்து மருமகன் அவரது தந்தையான ஒய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளரை தாக்கியுள்ளனர்.
இதில் தகராறு முற்றி இருவரையும் மனைவியின் குடும்பத்தார் வெட்டியுள்ளனர். இந்த வழக்கு சம்பந்தமாக காவல்துறையினர் 5 நபர்களை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.