திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலம் பகுதிகளில் உடைப்பு ஏற்பட்ட பாதாள சாக்கடை குழாய்கள் மாற்றும் பணி இன்று துரிதமான முறையில் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் 49 ஆவது வார்டு பங்களாப்பா நகர் இரண்டாவது தெருவில் நிரம்பிய பாதாள சாக்கடையை ஜெட் வாகனம் மூலம் அள்ளப்பட்டது. இப்பணிகளை கவுன்சிலர் அலி சேக் மன்சூர் திமுக நிர்வாகி பாளை புகாரி ஆகியோர் பார்வையிட்டனர்.