ராஜீவ்காந்தியின் நினைவு ஜோதியை காங்கிரஸ் நிர்வாகிகள் வரவேற்றனர்

58பார்த்தது
ராஜீவ்காந்தியின் நினைவு ஜோதியை காங்கிரஸ் நிர்வாகிகள் வரவேற்றனர்
மறைந்த முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ்காந்தியின் நினைவு ஜோதி கர்நாடக மாநிலத்தில் இருந்து புறப்பட்டு மங்களூர் கேரளா கன்னியாகுமரி திருநெல்வேலி வழியாக ஸ்ரீபெரும்புதூர் சென்றடைகிறது, கர்நாடகா மாநில பொறுப்பாளர் துரை வேல் அவர்களின் தலைமையில் தொடர்ந்து 32ஆண்டு நினைவு ஜோதி கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு திருநெல்வேலி மாநகர் மாவட்டம் காங்கிரஸ் கமிட்டி எல்லைக்குள் வண்ணாரப்பேட்டை சபாநாயகர் செல்ல பாண்டியன் சிலை அருகில் நினைவு ஜோதிக்கு மாநகர் மாவட்ட நிர்வாகிகள் வரவேற்றார்கள். வரவேற்பில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆர். தனுஷ்கோடி ஆதித்தன், ஆலங்குளம் ஒன்றிய கவுன்சிலர் ஊத்துமலை ஜமீன்தார் எஸ்பி. முரளிராஜா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர், மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. சங்கரபாண்டியன் தலைமை தாங்கினார் மாவட்டத்தை சேர்ந்த மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் மாவட்ட நிர்வாகிகள் மண்டலத் தலைவர்கள் மற்றும் அனைத்து சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் ஜோதி யாத்திரை குழுவினருக்கு மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டு பின்னர் அனைவரும் உணவருந்தி கோவில்பட்டி புறப்பட்டு சென்றனர்

தொடர்புடைய செய்தி