இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு தொடக்க விழா ஆர். நல்லகண்ணு நூறாவது பிறந்தநாள் விழா நெல்லை மாவட்ட அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர் ஆர். சடையப்பன் தலைமையில் இன்று சிறப்பாக நடைபெற்றது. நெல்லை அலுவலகம் முன்பு கட்சி கொடியை மாவட்டச் செயலாளர் ஆர். சடையப்பன், மாவட்ட உதவிச் செயலாளர் ஏ. சேதுராமலிங்கம் ஆகியோர் ஏற்றி வைத்தனர். ஏஐடியூசி கொடியை ஏஐடியூசி மாவட்ட துணை தலைவர் ஆர். ரெங்கன் ஏற்றி வைத்தார். கட்சியையும் நல்லகண்ணுவையும் வாழ்த்தி முழக்கமிட்டனர்.