நெல்லை பாளையங்கோட்டையில் இருந்து வண்ணாரப்பேட்டை செல்லும் சாலையில் ஊசி கோபுரம் அருகே இன்று அரசு பேருந்து ஒன்று இருசக்கர வாகனம் மீது லேசாக மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் சென்றவருக்கு சிறிய காயம் ஏற்பட்டது. பேருந்தை நிறுத்திய ஓட்டுனர் மற்றும் நடத்துனர் காயம் ஏற்பட்டவரின் அருகில் சென்று அவரிடம் நலம் விசாரித்தனர். இதனால் இந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.