நெல்லை பாஜக அலுவலகத்தில் இன்று அக்கட்சி வழிகாட்டுதல் குழு தலைவர் எச். ராஜா அளித்த பேட்டியில், 2026ல் பாஜக தலைமையிலான ஆட்சி அமையும். அப்போது திமுகவின் ஊழல் வெளியே கொண்டுவரப்படும். மத்திய அரசின் மீது பழி போடுவதற்கே மதுவிலக்கை மத்திய அரசு கொண்டு வர வேண்டும் என்ற போலி நாடகத்தை அரங்கேற்றுகிறார்கள். இந்து மக்களின் மனதை காயப்படுத்திவிட்டு இந்து மதப்படி பூஜைகள் நடத்தினால் எதுவும் மாறிப்போகாது என்றார்.