தாலுகா காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் கடந்த 2016 -ம் வருடம் வழிப்பறி மற்றும் அடிதடி வழக்கில் ஈடுபட்ட மகாராஜன் (38) என்பவர் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளிவந்தார். அவர் நீதிமன்ற விசாரணைக்கு கடந்த 1 மாதமாக ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்ததால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு மகாராஜனை போலீசார் இன்று கைது செய்து பிடியாணையை நிறைவேற்றி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.