நெல்லை மாவட்டம் காவல்கிணறு அருகே உள்ள புதூர் பகுதியில் இன்று வெறிநாய் ஒன்று பள்ளி மாணவர்களை துரத்தி கடித்துள்ளது. மூன்று மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல் அங்குள்ள பொதுமக்கள் சிலரையும் நாய் கடித்த நிலையில் வெறிநாய் கடிக்கும் சிசிடிவி காட்சி இன்று வெளியானது. இந்நிலையில் நாயை மக்கள் அடித்து கொன்றதாக தகவல் வெளியாகியுள்ளது.