தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே கடந்த 2014 ஆம் ஆண்டு காளிராஜ் முருகன் வேணுகோபால் ஆகிய 3 பேரை கொலை செய்த வழக்கில் 11 பேர் குற்றவாளிகள் என நெல்லை வன்கொடுமை சிறப்பு நீதிபதி சுரேஷ்குமார் நேற்று முன்தினம் அறிவித்தார். இன்று நடைபெற்ற விசாரணையில் 11 பேரில் பொன்னுமணி குருசாமி முத்துகிருஷ்ணன் காளிராஜ் ஆகிய 4 பேருக்கும் மரண தண்டனை விதித்து நீதிபதி பரபரப்பு தீர்ப்பளித்துள்ளார். மீதமுள்ளவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.