நெல்லை மூலக்கரைப்பட்டி EB ஆபிஸில் சுஜித் பெஞ்சமின் அரசு காண்ட்ராக்டராக உள்ளார். இன்று அவர் EB ஆபிஸ் பின்னால் உள்ள குடோனை பார்த்த போது அலுமினிய வயர் மற்றும் இரும்பு கம்பிகளை காணவில்லை. முக்கூடலை சேர்ந்த லூர்து பன்னீர் முத்தாரம்மா, கெளரி பாஞ்சாலி ஆகிய நான்கு பேரும் அலுமினிய வயர் மற்றும் இரும்பு கம்பிகளை திருடியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. எனவே போலீசார் நான்கு பேரையும் இன்று கைது செய்தனர்.