நெல்லை தச்சநல்லூர் மதுரை ரோடு அம்மா உணவகம் அருகே சிறப்பு எஸ்ஐ மாரியப்பன் மற்றும் போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டபோது அவ்வழியே இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த இசக்கிமுத்து ஜெயவெங்கடேஷ் இன்பராஜ் ஆகியோரின் இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 1, 100கிராம் எடையுடைய கஞ்சா விற்பனை செய்வதற்காக மறைத்து வைத்திருந்த்தால் போலீசார் 3 பேரையும் கைது செய்தனர்.