நீர் மேலாண்மைக்கான ஒன்றிய அரசு விருது வழங்கப்பட உள்ள நிலையில் நெல்லை நீர் நிலைகளை மத்திய குழுவினர் உண்மை தன்மை குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது நம் தாமிரபரணி அமைப்பு சார்பில் மேலநத்தம் முதல் தருவை வரை, மற்றும் கருப்பன் துறை முதல் திருவேங்கநாதபுரம் வரை அமைக்கப்பட்ட சீரமைப்பு பணிகளை பாராட்டினர்.