நெல்லையின் அடையாளமாக மாறியுள்ள இருட்டுக்கடை அல்வா கடை உரிமையாளரின் மகள் கனிஷ்கா - கோவையை சேர்ந்த தொழிலதிபர் பல்ராம்சிங் திருமணம் கடந்த பிப்ரவரி 2-ம் தேதி நடைபெற்றது. இந்த தம்பதியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பிரிந்துள்ளனர். பெற்றோர் வீட்டுக்கு வந்துள்ள கனிஷ்கா தனது கணவன் பல்ராம்சிங் மற்றும் அவரது பெற்றோர் மீது வரதட்சணை புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் நெல்லையில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.