நெல்லை மாநகர டவுன் வயல் தெரு பகுதியில் அமைந்துள்ள பாரதியார் தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழாவினை முன்னிட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி இன்று பள்ளியில் நடைபெற்றது. இதில் 28வது வார்டு அதிமுக கவுன்சிலர் சந்திரசேகர் கலந்து கொண்டு பரிசு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி கல்வி அலுவலர் சீனிவாசன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.