நெல்லை மேலப்பாளையம் வார்டு 45 மேத்தாமார்பாளையம் மூன்றாம் தெரு முனையில் திடீர் தீ விபத்து காரணமாக பரபரப்பு ஏற்பட்டது. அந்த பகுதியை சார்ந்த பொது மக்கள் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மின்னத்துல்லாவை தொடர் கொண்டு தகவல் தெரிவித்தனர், களத்திற்கு வந்த மின்னத்துல்லா தீயணைப்பு துறைகக்கு தகவல் கொடுத்து விட்டு பொதுமக்கள் உதவியுடன் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டார்.
தகவல் அறிந்ததும் பாளையங்கோட்டையில் இருந்து தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் எந்த ஒரு அசம்பாவிதமும் ஏற்படவில்லை. தீ விபத்து ஏற்பட்டதால் அங்கு லேசான பரபரப்பு ஏற்பட்டது.