நெல்லையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி

1076பார்த்தது
திருநெல்வேலி மாநகரில் மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலைகளில் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக சாலையையும், நடைபாதையையும் ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருக்கும் பொருள்கள், மேற்கூரைகள் ஆகியவற்றை 24 சம்பந்தப்பட்டவர்கள் தாமாக முன்வந்து அகற்றிட வேண்டும் என மாநகராட்சி ஆணையாளர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் அறிக்கை மூலம் நேற்று முன்தினம் எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில் நேற்று காலை முதலே சாலைகள், நடைபாதையில் இருந்த ஆக்கிரமிப்புகளை போலீஸ் பாதுகாப்புடன் அகற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டனர். வண்ணார்பேட்டையில் இருந்து திருநெல்வேலி நகரம் வரையிலான சுவாமி நெல்லையப்பர் நெடுஞ்சாலையில் இரு புறங்களிலும் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் அகற்றப்பட்டன.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி