எஸ்டிடியூ தொழிற்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

59பார்த்தது
எஸ்டிடியூ தொழிற்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
எஸ்டிடியூ தொழிற்சங்கம் நெல்லை மாநகர் மாவட்டம் பாளை பகுதி சார்பில் வண்ணார்பேட்டை
செல்ல பாண்டியன் பாலம் அருகில் இன்று (ஜூன் 8) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பகுதி தலைவர் மீராசா தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் கல்வத் வரவேற்புரையாற்றினார். மாவட்ட தலைவர் வழக்கறிஞர் ஆரிப் பாஷா, மாவட்ட துணை தலைவர் சையது மைதீன், மாவட்ட இணைச்செயலாளர் பாளை அன்சாரி, மாவட்ட பொருளாளர் சுல்தான் பாஷா, செயற்குழு உறுப்பினர்கள் இரும்பு சிந்தா, காஜா, தங்கள், ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் சனா சிந்தா கோஷங்களை எழுப்பினார். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக மாநில துணைத்தலைவர் சாந்து இப்ராஹிம் ஆர்ப்பாட்டத்தின் நோக்கங்களை எடுத்துரைத்தார். மாநில செயற்குழு உறுப்பினரும் மண்டல தலைவருமான ஹைதர் அலி, மண்டல செயலாளர் ராஜா முகமது, எஸ்டிபிஐ கட்சியின் மாவட்டத் துணைத் தலைவர் ஹயாத் முகம்மது, மாவட்டச் செயலாளர் பர்கிட் அலாவுதீன் ஆகியோர்
கலந்து கொண்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி