தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் இன்று சேலம் மாவட்டம் ஏற்காட்டில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் முத்தமிழன் தி. வேல்முருகன் தலைமையில் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர் மற்றும் செயலாளர் கலந்து கொண்டு நடைபெற்று வருகிறது. இதில் நெல்லை மத்திய மாவட்டம் சார்பாக மாநில துணைத்தலைவர் த. அ. உமர் மற்றும் நெல்லை மத்திய மாவட்ட தலைவர் அ. அமீதுகான் மற்றும் நெல்லை மத்திய மாவட்ட செயலாளர் ஜா. முகம்மது மீரான் ஆகியோர் கலந்து கொண்டனர்.