திருநெல்வேலி மாநகர சங்கன்திரடு ரயில்வே கேட் பகுதியில் உள்ள சாலை ரயில்வே துறை சார்பில் சீரமைக்கப்படாமல் கரடு முரடாக உள்ளது. இந்த சாலை வழியாக செல்லும் வாகனங்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இது குறித்து ரயில்வே துறைக்கு பலமுறை சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே இதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க கோரிக்கைகள் எழுந்துள்ளது.