நெல்லை: தந்தையை ஆத்திரத்தில் வெட்டிக்கொன்ற மகன்

78பார்த்தது
நெல்லை: தந்தையை ஆத்திரத்தில் வெட்டிக்கொன்ற மகன்
நெல்லை முத்தூர் பகுதியை சேர்ந்தவர் பூலையா. இவரது மகன் கணேசன். இவர்கள் இருவரும் அப்பகுதியில் தனித்தனியாக வீடு எடுத்து வசித்து வருகின்றனர். இதற்கிடையில், கணேசன் தனியாக வீடுகட்டி வரும் நிலையில், பூலையா குறிப்பிட்ட தொகையை கொடுத்துள்ளார். இந்நிலையில் கணேசன் அந்த தொகையை விட கூடுதல் தொகை வேண்டும் என பூலையாவிடம் பிரச்சனை செய்து வந்துள்ளார். 

தொடர்ந்து இன்று (ஏப்ரல் 1) காலை நெல்லைக்கு செல்ல பூலையா முத்தூர் பகுதியில் பேருந்திற்காக காத்திருந்தார். அப்போது அங்கு வந்த கணேசன் பூலையாவிடம் தகராறு செய்து தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் தந்தையை சரமாரியாக வெட்டியுள்ளார். 

இதில் பூலையா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். தப்பியோடிய கணேசன் காவல்நிலையத்தில் சரண் அடைந்துள்ளார். இவரிடம் காவல்துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி