நெல்லை: கல்லூரி பேராசிரியர்களுக்கு திறன் பயிற்சி முகாம்

58பார்த்தது
நெல்லை: கல்லூரி பேராசிரியர்களுக்கு திறன் பயிற்சி முகாம்
கலை அறிவியல் கல்லூரிகள் விரைவில் திறக்கப்பட உள்ளன. இந்த நிலையில் பாளை சேவியர்ஸ் கல்லூரியில் புதிய மாணவர்களை கையாள்வது எப்படி?, பாடத்திட்டங்கள் செயல்படுத்துதல் போன்றவை குறித்து பேராசிரியர்களுக்கான 3 நாள் சிறப்பு பயிற்சி முகாம் இன்று (ஜூன் 11) தொடங்கியது. உதவி இயக்குனர் சகாயமேரி வரவேற்றார். ஐக்கிய அறிவியல் கல்வி ஆணையத்தின் இயக்குனர் அழகுராஜ், துணை முதல்வர் லூர்துசாமி, ரெக்டர் இன்னாசி முத்து, செயலாளர் லாசர் பேசினர்.

தொடர்புடைய செய்தி