நெல்லை: ஓய்வுபெற்ற எஸ்ஐ கொலை வழக்கு; காவல்துறைக்கும் தொடர்பா?

76பார்த்தது
நெல்லை: ஓய்வுபெற்ற எஸ்ஐ கொலை வழக்கு; காவல்துறைக்கும் தொடர்பா?
நெல்லையில் ஓய்வுபெற்ற எஸ்.ஐ., ஜாகிர் உசேன் கொல்லப்பட்ட வழக்கில் 10க்கும் மேற்பட்டோரிடம் நெல்லை டவுன் காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.ஜாகிர் உசேன் கொலை வழக்கு தொடர்பாக கிருஷ்ணமூர்த்தி என்ற தவ்பிக் உள்பட 5 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். 

தவ்பிக்கின் மனைவி நூர் நிஷா தலைமறைவானார். இவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்நிலையில் நூர் நிஷாவுடன் தொலைபேசியில் பேசிய 10க்கும் மேற்பட்டோருக்கு காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர். இந்த கொலை வழக்கு தொடர்பாக காவல் துறை அதிகாரி ஒருவரிடமும் விசாரணை நடத்தப்படுவதாக தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி