திருநெல்வேலி மாநகராட்சி மைய அலுவலக வளாகத்தில் சேதமடைந்த மழைநீர் வடிகால் ஓடை சிமெண்ட் மூடியினை துரித நடவடிக்கையாக மேயர் ராமகிருஷ்ணன் முன்னிலையில் இன்று அப்புறப்படுத்தப்பட்டு மாற்று மூடி பொறுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாமன்ற உறுப்பினர்கள் கந்தன், மாரியப்பன், மன்சூர், அல்லாபிச்சை, அப்துல் சுபஹானி, உதவி ஆணையர் நாராயணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.