நெல்லை பேருந்து நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ஓருவர் நேற்று பேருந்து நிலையத்தில் ரோந்து செல்லாமல் அங்கு ஓரமாக அமர்ந்து, காதில் ஹெட்போன் மாட்டிக் கொண்டு செல்போனில் ஆன்லைன் கேம் விளையாடிய காணொளி வெளியாகி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நீதிமன்றம் முன்பு கொலை நடந்த பொழுது நீதிபதிகள் காவலர்கள் செல்போனில் மூழ்கியுள்ளனர் என எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.