தமிழ்நாடு முழுவதும் 56 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு நேற்று (டிசம்பர் 29) உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த வகையில் நெல்லை மாநகர காவல் ஆணையாளர் ரூபேஸ் குமார் மீனா மாற்றம் செய்யப்பட்டு சந்தோஷ் ஹடிமனி நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதே போல் நெல்லை துணை ஆணையாளர்கள் அனிதா, விஜயகுமாரும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.