நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் கடந்த 27ஆம் தேதி பி.காம் பட்டப்படிப்பிற்கான தொழிற்சாலை சட்டம் என்ற பாடத்தின் வினாத்தாள் கசிந்தது. இதனையடுத்து அன்று நடக்க இருந்த தேர்வு ரத்து செய்யப்பட்டது. இந்த வினாத்தாள் கசிந்த விவகாரம் தொடர்பாக 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்ததுடன், தேர்வாணையரின் வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்பியது யார் என்பது குறித்த விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.