நெல்லை: மேயருக்கு நன்றி தெரிவிப்பு

85பார்த்தது
நெல்லை: மேயருக்கு நன்றி தெரிவிப்பு
நெல்லை மாநகராட்சி பழைய பேட்டை பகுதியில் ரோடு சீரமைப்பதற்காக கடந்த மாதம் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதில் ராசுகுட்டி என்னும் மாற்றுத்திறனாளி மிகவும் சிரமப்பட்டார். இதை கண்டறிந்த மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன் நேரில் சென்று ஆய்வு செய்து உடனடியாக தார்சாலை அமைத்து தந்தார். இதை பாராட்டும் விதமாக பழைய பேட்டை பொதுமக்கள் மற்றும் ராசுகுட்டி மாற்றுத்திறனாளி நேற்று நேரில் மேயருக்கு நன்றி தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி