திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையை சேர்ந்த முருகேசன் அவர்கள் நடந்து முடிந்த UPSC தேர்வில் இந்திய அளவில் 1031 பேருக்கு நடந்த இறுதி தேர்வில் 537 வது இடம் பிடித்து IPS பணிக்கு தேர்வு பெற்றுள்ளார். உயர்திரு. முருகேசன் அவர்களை திருநெல்வேலி மாவட்டம் மற்றும் மாநகர பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பு தலைவர் பரமேஸ்வரன், செயலாளர் ஜெபசிங், பொருளாளர் ஆரோக்கியராஜ் ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.