சென்னையில் தடையை மீறி போராட்டம் நடத்த முயன்ற நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (டிசம்பர் 31) கைது செய்யப்பட்டார். இதற்கு எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அரசுக்கு எதிராக கண்டன குரல் எந்த வகையிலும் எழக்கூடாது என எண்ணுவதே சர்வாதிகாரம் தான் என தெரிவித்துள்ளார்.