நெல்லை மாநகர டவுன் 16வது வார்டில் இன்று (ஜூன் 3) முன்னாள் திருநெல்வேலி மாநகராட்சி மேயர் சரவணன் ஏற்பாட்டில் முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் பிறந்தநாள் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நெல்லை மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் அப்துல் வஹாப் பங்கேற்று கலைஞருக்கு மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் துணை மேயர் ராஜு உள்ளிட்ட திமுகவினர் உடன் இருந்தனர்.